18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் தயாரிப்பு. நடிகர் வையாபுரி தொடங்கி வைத்தார்

மேலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் தயாரிப்பு. நடிகர் வையாபுரி தொடங்கி வைத்தார்

எழுதியவர்: mohan December 5, 2023, 5:36 pm

நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாப்பட உள்ள நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நான்குவழிச்சாலையில் உள்ள பிரபல தனியார் உணவகமான (டெம்பிள் சிட்டி) சார்பில் 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட 500 கிலோ அளவிலான உலர் பழங்களை ஒயின் மற்றும் உயர் ரக மதுபானங்கள் கொண்டு, ஆல்கஹாலல் பதப்படுத்தி கேக் தயாரிக்கும் பணியினை, திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி, மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவரும், உணவக உரிமையாளரான டெம்பிள் சிட்டி குமார், நடிகர் சுரேஷ், தமிழ்நாடு துணை நடிகர்கள் சங்கத் துணைத் தலைவர் ஜெகன், ஹோட்டல் நிர்வாகி எல்.கே. அபிகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.சுமார் 20 நாட்களுக்கு மேலாக ஆல்கஹாலல் பதப்படுத்தப்பட உள்ள இந்த உலர் பழங்கள் கொண்டு, 2500 கிலோ கொண்ட கேக் தயாரிப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு 2 ஆயிரம் கிலோவில் தயாரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் கேக், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும் வகையில் தயாரிக்கப்படும் இந்த 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் உணவகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!