18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை குப்பை கால்வாயை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் வழி காட்டுவார்களா?

மதுரை குப்பை கால்வாயை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் வழி காட்டுவார்களா?

எழுதியவர்: mohan December 5, 2023, 4:56 pm

அண்ணாநகர், மதுரை அண்ணாநகர், முத்துமாரியம்மன் கோவில் அருகே யானைக்குழாய் கால்வாயில் குப்பை கொட்டப்படுவதால், கழிவு நீர் வெளியேற வழியின்றி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும், கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கால்வாயை ஆய்வு செய்து, கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!