18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை

யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை

எழுதியவர்: mohan December 5, 2023, 4:52 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் யானை, புலி, மான், கரடி மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து அடிவாரப் பகுதியை நோக்கி இறங்கும் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் நச்சாடை கோவில் கரை பகுதியில் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தென்னந்தோப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.தொடர்ந்தது இது போன்று யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.உடனே யானைகள் விவசாய நிலத்துக்கு வராமல் அகழிகள் அமைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!