17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதல்வர் ஜெயலிதா நினைவு தினம்: மண்டபம் ஒன்றிய அதிமுக மலர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலிதா நினைவு தினம்: மண்டபம் ஒன்றிய அதிமுக மலர் அஞ்சலி

எழுதியவர்: mohan December 5, 2023, 4:27 pm

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராம நாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை வலையவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு, மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மண்டபம் கிழக்கு ஒன்றிய ஒன்றிய செயலர் டி.ஜி.ஜானகி ராமன் தலைமை வைத்தார். அதிமுக மருத்துவர் அணி மாவட்ட செயலர் டாக்டர் கே.இளையராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலர் ராமமூர்த்தி,மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை செயலர் சந்திரன்,வேதாளை கிளைச் செயலர் முகைதீன் பிச்சை, மாவட்ட மீனவர் அணி இணைச் செயலர்கள் ஜாகிர் உசேன் (மண்டபம்), அலெக்ஸ் (பாம்பன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி குமரேசன், ஒன்றிய மகளிர் அணி செயலர் விஜயலட்சுமி,குஞ்சார் வலசை கிளை செயலர் செந்தில்குமார், மரைக்காயர் பட்டினம் கிளைச் செயலர் சுலைமான், மாவட்ட மீனவர் அணி பொருளாளர் செல்லமுத்து,தகவல் தொழில்நுட்பப் பிரிவு மனோஜ் குமார், ஒன்றிய இளைஞர் அணி செயலர் ஜோதி பாசு, இளைஞர் பாசறை விமல், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முனீஸ்வரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலர் நகரத்தினம், தங்கச்சிமடம் மெல்டஸ், வெலிங்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இடையர்வலசை கிளைச் செயலர் முத்து நன்றி கூறினார்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!