17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் திருமங்கலத்தில் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் திருமங்கலத்தில் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

எழுதியவர்: mohan December 4, 2023, 3:56 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழக அரசை வலியுறுத்தியும் , அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருமங்கலத்தில் இருந்து , மாவட்டம் தோறும் அரசு ஊழியர்களை திரட்டி, வருகிற ஒன்பதாம் தேதி (09.12.2023) சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஊழியர்களை திரட்டி வருகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும் , சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!