17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

எழுதியவர்: mohan December 4, 2023, 3:31 pm

 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 330 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி குறித்த சமூகத் தரவு கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு கையேட்டை வழங்கி விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 13 பேருக்கு காதொலிக்கருவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 7 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சந்திரமோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி உடனிருந்தனர்.

 ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!