17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்திரக்குடி பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டி பரிசளிப்பு

சத்திரக்குடி பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டி பரிசளிப்பு

எழுதியவர்: mohan December 4, 2023, 3:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போகலூர் வட்டார கிளை சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி இன்று நடந்தது.தலைமை ஆசிரியர் அ.மருதுபாண்டி தலைமை வகித்தார். கிளை செயலர் கோ.குமரேசன் வரவேற்றார். போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர் பங்கேற்றனர்.நடுநிலை வகுப்பு பிரிவில் கே.வலசை நடுநிலைப்பள்ளி, முத்துவயல் நடுநிலைப்பள்ளி, அ.புத்தூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல் 3 இடம் பிடித்தனர். உயர்நிலை வகுப்பு பிரிவில் காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கொடிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி முதல் மூன்றிடம் பிடித்தனர். மேல்நிலை பிரிவில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தனர். போட்டியில் வென்ற மாணாக்கருக்கு போகலூர் வட்டாரக் கல்வி அலுவலர் சூசைராஜ் பரிசு வழங்கினார்.அறிவியல் இயக்கத மாவட்டச் செயலர் கு. காந்தி வாழ்த்தி பேசினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மலைச்சாமி, சரவணன் ஆகியோர்ஏற்பாடு செய்தனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!