திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்
பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ் இலக்கிய மன்றவிழா அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முனைவர் பிரசன்னா தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர் திருவண்ணாமலை சன் கலைமற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் செந்தில்வேலன் அவர்கள் “தமிழர்களின் வாழ்வியலில் நாட்டுப்புற பாடல்கள்எனும் தலைப்பில் மாணவர்களுக்கு இசையுடன் பாடலைப் பாடியும் கருத்துகளைவழங்கினார். தமிழா நீ பேசுவது தமிழா என்ற காசி ஆனந்தன் பாடலை மாணவர்களை பாட வைத்து மகிழ்வித்தார்.இந்நிகழ்ச்சியினைமுதுகலை தமிழ் ஆசிரியர் முனைவர் பார்த்திபன் அவர்கள் வரவேற்றார் இருபால் உதவி தலைமை ஆசிரியர்கள் பார்த்தசாரதி, பத்மா முன்னிலை வகித்தனர்.மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட பட்டதாரி ஆசிரியர் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியை கனிமொழி ஆகியோர் செயல்பட்டனர். பல்வேறு தமிழ் பேச்சு கட்டுரை ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் முதுகலை தமிழாசிரியர் முருகையன் நன்றியுரை வழங்கினார். தமிழ் இலக்கிய மன்ற விழாவில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ் இலக்கிய மன்ற விழா
எழுதியவர்: mohan December 4, 2023, 3:13 pm




You must be logged in to post a comment.