17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எழுதியவர்: mohan December 4, 2023, 1:33 pm

சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் இரண்டு மிக்ஜாம் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் மதுரையிலிருந்து பகல் 10:20 மணிக்கு மற்றும் 11 40 மணியளவில் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12 30 மணியளவில் வழக்கமாக மதுரை விமான நிலையம் வந்தடையும்.தற்பொழுது துபாயிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணி அளவில் மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!