மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , திருமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது ,திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் பகுதியில் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் சோதனை செய்தபோது , அதில் 22 கிலோ கஞ்சா இருப்பதும் , அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், தேனி மாவட்ட வருசநாடு பகுதியை சின்னன் (30) , திருமங்கலம் பகுதி செங்குளத்தை சேர்ந்த மோகன்ராஜ் (21), ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (48), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (41), கப்பலூர் காலனி சேர்ந்த நல்ல காமு (43), தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.