18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடுக்கடலில் 8 கிலோ கடத்தல் தங்கம்பறிமுதல் வழக்கு:ஒருவர் கைது

நடுக்கடலில் 8 கிலோ கடத்தல் தங்கம்பறிமுதல் வழக்கு:ஒருவர் கைது

எழுதியவர்: mohan December 3, 2023, 5:19 pm

இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்த வழக்கில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இன்று கைது செய்தனர். இலங்கையிலிருந்து கடல் வழியாக படகு மூலம் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு நவ.28 இரவு தகவல் கிடைத்தது. இதன்படி, மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி கடற்பகுதிகளைசுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் நவ.29 அதிகாலை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பாம்பன் முந்தல் முனை கடற்கரைக்கு வந்த நாட்டுப் படகை சிலர் நங்கூரமிட்டு நிறுத்த முயன்றனர். இதையடுத்து அப் படகை அதிகாரிகள் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த 4 பேர் ஒரு பண்டலை கடலில் வீசி எறிந்து தப்பினர். நாட்டு படகை அதிகாரிகள் சோதனை செய்ததில் அங்கு மறைத்து வைத்திருந்த 3.5 கிலோ தங்கக்கட்டிகளை கைப்பற்றினர்.இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் அளித்த தகவல் படி தனுஷ்கோடி -பாம்பன் இடையே மன்னார் வளைகுடா கடலில் தெர்மாகூலில் கட்டியவாறு மிதந்த தங்கக்கட்டி பண்டலை கைப்பற்றினர். அதை எடையிட்டதில் 4.5 கிலோ தங்கக்கட்டி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையோரை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பான விசாரணையில் பாம்பனைச் சேர்ந்த பிரசாத், அஸ்கர் ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் ராமநாதபுரம் கடம்பா நகர், நாகநாதபுரம் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் படி 2 பேரையும் கைது செய்ய சுங்கத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்தனர். இதில் பிரசாத் என்பவரை இன்று கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!