18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியாக இருந்த குழந்தை வீட்டில் உள் தாப்பாள் போட்டுக் கொண்டதால் அவதிப்பட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர் .

தனியாக இருந்த குழந்தை வீட்டில் உள் தாப்பாள் போட்டுக் கொண்டதால் அவதிப்பட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர் .

எழுதியவர்: mohan December 3, 2023, 4:55 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி சேர்ந்த ரவிக்குமார் .இவர்களது மகள் மேகவர்ஷினி வயது 6. பெற்றோர்கள் வெளியே படுத்துக் கொண்டிருந்த நிலையில் குழந்தை தனி அறையில் சென்று தெரியாமல்தாப்பாள் போட்டுக் கொண்டதால் குழந்தை எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன மேகவர்ஷினி அழு குரல் கேட்டு தந்தை ரவிக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்றுள்ளனர். எனினும் கதவு திறக்க முடியவில்லை. உடனடியாக மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து    கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!