17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களுக்கு 19 ஆயிரம் பரிசு – ஒன்றிய செயலாளர் அறிவிப்பு

பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களுக்கு 19 ஆயிரம் பரிசு – ஒன்றிய செயலாளர் அறிவிப்பு

எழுதியவர்: mohan December 1, 2023, 7:44 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் கிளைச் செயலாளர்களுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அமைப்பது தொடர்பான படிவங்களை வழங்கிய ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி., விரைவில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்துத் தரும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் என 19 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது பலரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!