17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருப்பரங்குன்றம் கோவிலில் தேமுதிக நிர்வாகிகள் தங்கத் தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு.

விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருப்பரங்குன்றம் கோவிலில் தேமுதிக நிர்வாகிகள் தங்கத் தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு.

எழுதியவர்: mohan December 1, 2023, 10:33 am

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடல் பெற வேண்டி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அறுபடைகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மதுரை அவனியா புரம் பகுதி கழக செயலாளர் செந்தில் ஏற்ப்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் கணபதி சேர்ந்த தேமுதிக சார்பாக கருவறையில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து 50க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்து கேப்டன் பூரண குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டனர்,பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!