17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் ஐப்பசி மாத வசூல்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் ஐப்பசி மாத வசூல்

எழுதியவர்: mohan November 30, 2023, 6:40 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 40 லட்சத்து 97ஆயிரத்து 872 ரூபாய் ரொக்கமாகவும், 0.83 கிராம் தங்கமும், 1 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.40 லட்சத்து, 97ஆயிரத்து 872 ரூபாய், தங்கம் 0.83 கிராம், வெள்ளி 1 கிலோ 385 கிராம் இருந்தது.இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!