17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு இராமநாதபுரத்தில் ஆலோசனை

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு இராமநாதபுரத்தில் ஆலோசனை

எழுதியவர்: mohan November 30, 2023, 12:39 pm

ராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் தலைமை வகித்தார்.பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் வரவேற்றார்.ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்ட பாதிப்புகள் குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசினார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது.ஹைட்ரோ கார்பன் மீத்தேன் பாதிப்பு குறித்து அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்புடன் துண்டு பிரசுரம் , போராட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுபிரசாரம் செய்தல்,மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு கூட்டம் டிச. 9ல் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆதித்தமிழர் கட்சி தென் மண்டல செயலாளர் பாஸ்கரன், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி சித்ரா,ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோ.ஸ்டீபன் ராஜ் விசிக முன்னாள் மண்டல செயலாளர்யாசின், தமிழ் புலிகள் கட்சி (கிழக்கு) மாவட்ட செயலாளர் ரஞ்சித், சமூக ஆர்வலர் தமிழ்வாணன்,இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் சார்பில் குருதிவேல் மாறன், சிபிஎம் (எல்) மகளிரணி ஒருங்கிணைப்பாளர் சந்தனமேரி, சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்கம் சார்பில்குணசேகரன், பெரியார் பேரவை சார்பில் சூரிய நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிநிஜாமுதீன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!