17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபர் கைது..

செங்கோட்டை அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபர் கைது..

எழுதியவர்: mohan November 30, 2023, 11:26 am

செங்கோட்டை அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரால் அனைத்து சமூக வலைதளங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டை அருகே பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார்(23). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இது குறித்து மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிவுறுத்தியதின் பேரில் சார்பு ஆய்வாளர் இளவரசி மேற்படி விஸ்வநாதபுரம் முத்து இருளப்பன் என்பவரின் மகனான உதயகுமார்(23) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!