18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் மரம் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை

இராமநாதபுரத்தில் மரம் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை

எழுதியவர்: mohan November 30, 2023, 10:22 am

இராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரமிருந்த மரத்தை நள்ளிரவில் வெட்டி சாய்த்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை பாரதி நகர் சாலை ஓரம் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இதில் கால் நூற்றாண்டை எட்டிய தூங்கு முக வாகை மரம் நவ.25 நள்ளிரவில் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்தது. இது குறித்த தகவலின் படி, நெடுஞ்சாலைத்துறை ராமநாதபுரம் நகர் சாலை ஆய்வாளர் சரவணன் அங்கு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக 2 நாட்களாக விசாரித்தார். யார் தெரியவராததால் மரத்தை வெட்டிய சம்பவம் குறித்த போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். இதன்படி கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து சார்பு ஆய்வாளர் தினேஷ் பாபு விசாரித்து வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!