18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹைட்ரோ கார்பன் திட்டம்: ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்..

ஹைட்ரோ கார்பன் திட்டம்: ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2023, 12:01 am

ராமநாதபுரம், நவ. 27- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதி கொடுக்கக் கூடாது எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில்  விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன்திட்டத்திற்கு ஓஎன்ஜிசி ., க்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் காசிநாத துரை தலைமை  வகித்தார். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கருணாகரன், ராமநாதபுரம், ராமேஸ்வரம் தாலுகா செயலாளர்கள் செல்வராஜ், சிவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, தாலுகா குழு அசோக், மணிகண்டன், ஞானசேகர், ராமச்சந்திர பாபு, கார்த்திக் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!