17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2023, 3:29 pm

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்திலுள்ள சிறு குறு வியாபாரிகளிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பேசினார். அப்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன் அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணிற்கு (9498166566) நேரடியாக புகார் அளிக்கலாம் எனவும், புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!