18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் – தேனி டிஎஸ்பி பார்த்திபன் அறிவுரை

மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் – தேனி டிஎஸ்பி பார்த்திபன் அறிவுரை

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2023, 3:03 pm

தி.மலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் வேல்முருகன் அனைவரும் வரவேற்று பேசினார் நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மேல்பெண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேனி மாவட்ட டி.எஸ்.பி பார்த்திபன் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த அறிவுரையும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது பற்றியும் சிறப்புரையாற்றினார் அவர் பேசும்போது; கனவுகள் காண வேண்டும். அந்த கனவுகளை செயல்படுத்த நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்கள் நல்ல தலைவர்களாகவும் மாறமுடியும் என்றார். மேலும் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று பேசினார் நிகழ்ச்சியில் பள்ளியின் சங்கீதா, ஜூனியர் ரெட் கிராஸ் பொறுப்பாசிரியர், நாராயணன், சுற்றுச்சூழல் மன்றம் பொறுப்பாசிரியர் அரசு, சாரண ஆசிரியர் சரவணகுமார் ஆறுமுகம், மகேஸ்வரி மற்றும் பள்ளியின் புரவலர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!