இராமநாதபுரம், நவ.25 – இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து (பீச் வாலிபால்) 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் ஆடவர் பிரிவு போட்டி மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது . இதில் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப்பள்ளி 14, 17, 19 வயது பிரிவுகளில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போல் டேக்வாண்டா போட்டியில் மாணவி ராகவி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த மாணவர்களை முஹமதியா பள்ளிகளின் தாளாளர் அஹமது கபீர், செயலர் செய்யது அஹமது கபீர், தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி, உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ் பாபு, ஷாஜகான் சலீம், உடற்கல்வி ஆசிரியர் அஜிஸ் கனி பாராட்டினர்.
பீச் வாலிபால் மாநில போட்டி: சித்தார்கோட்டை பள்ளி தகுதி..
எழுதியவர்: ஆசிரியர் November 25, 2023, 10:52 am




You must be logged in to post a comment.