18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி: அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு..

கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி: அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு..

எழுதியவர்: ஆசிரியர் November 24, 2023, 10:43 pm

இராமநாதபுரம், நவ.24 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் ராமேஸ்வரத்தில் நடந்தன. பள்ளி மாணாக்கருக்கான கலைஞர் காத்த மனித நேயம் கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி மீகா ஸ்னோபிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை, சான்று கேடயம் வழங்கப்பட்டது.

பெரியார் அண்ணா வழியில் கலைஞர்  பேச்சு போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இப்பள்ளி பிளஸ் 1 மாணவி பிளசி ஸ்ரியாவுக்கு ரூ. 3 ஆயிரம் பரிசு, சான்று, கேடயம் வழங்கப்பட்டது. பரிசு வென்ற மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ராஜ், உதவி தலைமை ஆசிரியை அனுஜா, ஆசிரியர்கள் முஹமது ரியாலுதீன், நிர்மலா, நாகலிங்கம், செந்தில்குமார், கவியரசு, ஜெரோம் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!