17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் வந்தடை திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..

திருப்பரங்குன்றம் வந்தடை திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2023, 5:38 pm

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்குபெற இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

50 இருசக்கர வாகனத்தில் வந்த திமுக இளைஞரணியினருக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரவேற்பு. திருப்பரங்குன்றத்தில் திமுக  இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணியிருக்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன். மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்து நினைவு பரிசு வழங்கி இளைஞரணியினரை உற்சாகப்படுத்தினர்.

டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் 2 வது இளைஞரணி மாநாட்டில் பங்கு பெற பைக்கில் ஊர்வலமாக வரும் இளைஞர் அணியினரை திருப்பரங்குன்றத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் இருசக்கர வாகன பிரச்சார அணியினர் திருமங்கலம் புறப்பட்டுச் சென்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!