17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு..

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2023, 5:30 pm

இராமநாதபுரம், நவ.23- இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மழை நீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து மழைநீர் தேங்காத வகையில் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிய கட்டடங்களை பார்வையிட்டார். மருத்துவ பயன்பாட்டிற்கான குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை பார்வையிட்டார். பொதுப்பணித்துறை மூலம் அடிக்கடி கண்காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார், மனோஜ் குமார், பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு உதவி கோட்ட செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!