17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2023, 10:08 am

தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) சார்பில் பாலஸ்தீன் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ (எம்எல்) மாவட்ட குழு உறுப்பினர் எஸ். தம்பிதுரை தலைமை தாங்கினார். சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் புதியவன் என்ற சுப்பிரமணியன் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

பாலஸ்தீன மக்களின் மீதும், பெண்கள் குழந்தைகள் மீதும், மருத்துவமனைகள் மீதும் ஏவுகணைகளை வீசியும், குண்டு மழை பொழிந்தும் ஈவிரக்கம் இல்லாமல் படுகொலை செய்வதை கண்டித்தும், காசாவை விட்டு உடனே வெளியேற வலியுறுத்தியும், இந்திய மோடி அரசு இன அழிப்பு செய்யும் இஸ்ரேலுக்கு துணை போவதை கண்டித்தும், உடனே போரை நிறுத்திட. கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்எல்) மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துசாமி, மாடசாமி, மாதவன், வேலு மற்றும் முருகையா, முத்துலட்சுமி, செண்பகம், பலவேசம், ஆறுமுகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!