17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம்…

அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2023, 7:57 pm

தி.மலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம் நடத்தினர். 

ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

 செங்கம் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் அருள்குமார், தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு பங்கேற்று, தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும்,வெள்ளத்தில் சிக்கியவர்களை எளிதில் காக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். முதலுதவி குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்குடம், பலூன், பாலிதீன் பைகள், டியூப், போன்ணு எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறை குறித்து விளக்கினர். மேலும் நீர்நிலைகளில் குளிக்கும் போது பெற்றோர் துணையுடன் உரிய கவச உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நிகழ்வில் பள்ளியின் சாரண மாணவர்கள், ரெட் கிராஸ் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் ,திமுக பிரமுகர் செல்வம், மாணவ பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!