17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே நபார்டு நிதியுதவியில் பள்ளி கட்டடம் திறப்பு..

கமுதி அருகே நபார்டு நிதியுதவியில் பள்ளி கட்டடம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2023, 10:42 am

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டிய பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  திறந்து வைத்தார். கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அரசு அனுமதியுடன் நபார்டு நிதியுதவி மூலம் ரூ.296.70 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் புதிதாக 10 வகுப்பறை கட்டடங்கள், ஒரு ஆய்வகம், கழிப்பறை கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் (கட்டடம்) குருதிவேல்மாறன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர், தமிழ்செல்வி, , கமுதி வட்டாட்சியர் சேதுராமன், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சசிகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் காளீஸ்வரி, கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!