17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில்  புனரமைத்த நீச்சல்குளம் திறப்பு..

ராமநாதபுரத்தில்  புனரமைத்த நீச்சல்குளம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2023, 10:35 am

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நீச்சல்குளம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.37.50 லட்சம் மதிப்பில் புனரமைத்த நீச்சல் குளம், பேவர் பிளாக் பாதையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவங்கி வைத்தார்.

மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வரும் தமிழக ஸ்டாலின் வழியில், இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் பல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நீச்சல்குளம் சீர்செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவிதா கதிரேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!