17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.20.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்:

ராமநாதபுரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.20.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்:

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2023, 10:32 am

இராமநாதபுரம், நவ.21 – ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 70-வது கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்ப்பட்டது. இதில் 1,612 பேருக்கு பயிர்க்கடன், 150 பேருக்கு ஆடு, மாடு பராமரித்தல், மீன்வளக்கடன்,  694 பேருக்கு  மகளிர் சுயஉதவிக் குழு கடன், 36 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் கடன் என 2.394 பேருக்கு ரூ.20.70/- கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன வழங்கினார்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மனோகரன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் கருணாகரன், துணை பதிவாளர்கள் புஷ்பலதா, கோவிந்தராஜன, மீனாட்சி சுந்தரம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மேலாளர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!