17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சவுதி தலைநகர் ரியாதில் 32வது கலாச்சார திருவிழா தொடக்கம்…

சவுதி தலைநகர் ரியாதில் 32வது கலாச்சார திருவிழா தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2018, 10:16 pm

சவுதி அரேபியாவின் கலாச்சார விழா ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டு அரசு நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக 32வது வருடமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 24ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவை சவுதி மன்னர் சல்மான் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு மன்னர் சல்மான் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, அரசு முறை பயணமாக சவுதி சென்றிருந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சவுதி அரசருடன் இருநாட்டின் நட்புறவு சம்பந்தமாக பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் யோகா, இஸ்ரோ, டிஜிட்டல் இந்தியா ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக வரும் 15 மற்றும் 16 தேதிகளில் “நாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் தலைப்பில் தமிழ்நாட்டிற்கென பிரத்யேக அரங்கத்தில் தமிழ் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!