18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

நெல்லை அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2023, 8:14 am

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறப்பு போட்டிகளை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக நவ.14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரைதல் போட்டியும் நடத்தப்பட்டன. ஏராளமான மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய நல்லாசிரியர் செல்லப்பா கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். கவிஞர் சுப்பையா உடன் இருந்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!