17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள்: ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள்: ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..

எழுதியவர்: ஆசிரியர் November 12, 2023, 1:46 pm

இராமநாதபுரம், நவ.12 – 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் ஆக.18ல் மீனவர் நல மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவ வீட்டு வசதி திட்டம் மூலம் மீனவர்களுக்கு  வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,  உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் மண்டல மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப்படிவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டணமின்றி பெற்றுகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம், மீனவர் நலத்துறைத்துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்படிவத்தை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் அல்லது நேரில் செப். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!