17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகள் உசிலம்பட்டி அருகே காத்திருப்பு போராட்டம்..

விவசாயிகள் உசிலம்பட்டி அருகே காத்திருப்பு போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2023, 11:11 pm

வைகை அணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் நீர் திறக்க கோரி விவசாயிகள் உசிலம்பட்டி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகை அணை தனது முழு கொள்ளவான 71 அடியை எட்டியுள்ள சூழலில் கடந்த செப்டம்பர் மாதமே தண்ணீர் திறந்திருக்க வேண்டிய திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தற்போது வரை தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பல்வேறு விவசாய சங்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் மற்றும் அதிமுக, அமமுக, பார்வட் ப்ளாக், பாமக கட்சி என பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமங்கலம் பிரதான கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!