17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி டிடிடிஏ கல்லூரியில் தமிழ் மன்ற விழா; தென்காசி எம்எல்ஏ திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு..

இலஞ்சி டிடிடிஏ கல்லூரியில் தமிழ் மன்ற விழா; தென்காசி எம்எல்ஏ திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2023, 11:27 am

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஷீலா நவரோஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவ ஆசிரியர் ஜெசுலின் அமிர்தா வேத பகுதி வாசித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வரவேற்று பேசினார். மாணவ ஆசிரியர்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தன. தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், பேரூர் திமுக செயலாளர் முத்தையா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், பொறியாளர் பிரசாத், கந்தையா, டாக்டர் ஜெயசந்திரன், சாலமோன், பொன்ராஜ், பேராசிரியர்கள் ஷீலா, ஜெனிபர், முத்துலட்சுமி, ஹெப்சி, நூலகர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் மாணவ ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ ஆசிரியர்கள் ருகையா ருகி, ஆயிஷா நமீரா தொகுத்து வழங்கினர். ஹெப்சி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!