17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் நிறுவனம் சார்பாக கட்டுமான நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி பொருட்கள்…

தனியார் நிறுவனம் சார்பாக கட்டுமான நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி பொருட்கள்…

எழுதியவர்: ஆசிரியர் November 9, 2023, 9:45 am

இராமநாதபுரம், நவ.9 – இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஸலாம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன கட்டுமான தொழிலாளர்களுக்கு  தீபாவளி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸலாம் கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவனரும், ராமநாதபுர மாவட்ட அரசு காஜியுமான மவுலவி வி.வி.ஏ.ஸலாஹுத்தீன் ஆலிம் தலைமை வகித்தார். Student.com நிறுவனர் ஸாலிஹ் ரஹ்மான், ஸலாம் கன்ஸ்ட்ரக்க்ஷன் கண்காணிப்பாளர் என்.முஹமது இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். ஸலாம் கன்ஸ்ட்ரக்க்ஷன் சேர்மன் மெளலவி ஏ. எஸ்.முஹமது அப்துர் ரஹ்மான் ஆலிம் துஆ ஓதி துவங்கி வைத்தார். இதில் ஸலாம் கன்ட்ரக்க்ஷன் மேலாளர் பிரீத்திகா, மேஸ்திரிகள் சேதுபாண்டி , முருகன், சென்ட்ரிங் மேஸ்திரி கருப்பசாமி, கான்கிரீட் மேஸ்திரி மாரியப்பன் உள்ளிட்ட இதர பணியாளர்களுக்கு இனிப்பு, புத்தாடை வழங்கப்பட்டது.

ஸலாம் கன்ஸ்ட்ரக்க்ஷன் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.அஹ்மது அப்துல் காதிர் ஷுஐபு நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!