17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடியிறுப்பு பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு …

உசிலம்பட்டி அருகே குடியிறுப்பு பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு …

எழுதியவர்: ஆசிரியர் November 7, 2023, 5:57 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் உள்ளது டி.இராமநாதபுரம் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் அருகிலுள்ள வண்டாரி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடை எவ்வித முன்அறிவிப்பும் இன்றி டி.ராமநாதபுரத்திற்கு இன்று மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.கிராமத்தில் குடியிறுப்பு பகுதியில் திடீரென மது பானக்கடை வந்ததால் ஆவேசமடைந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஒயின்ஷாப்பை முற்றுகையிட்டனர்.இவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மகளிர் அணித்தலைவர் அம்பிகா தலைமையில் பெண்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.சம்வமறிந்த டி.இராமநாதபுரம் போலிசார் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!