18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2018, 2:07 pm

கீழக்கரை முனைதீனியா பள்ளி சார்பாக இன்று (08/02/2018) தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி வடக்குத் தெருவில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.  இப்பேரணி சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர்.குமரகுருபரன் BHS,   துணை இயக்குனர் தொல்நோய் துறை   டாக்டர்.ரவிச்சந்திரன் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையுடன் இப்பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை முகைதீனியா பள்ளி கல்விக் குழுவின் செயலாளர் மற்றும் வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன் கொடியசைத்து பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். மேலும் கீழக்கரை அரசு மருத்துவர் மவாஃபியா, பக்கிர் முஹம்மது BHS,  சுந்தரபாண்டியன் NMS,  செல்லக்கண்ணு மற்றும் செவிலியர்கள் முழு மேற்பார்வையுடன் இப்பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்க பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன் மற்றும் கல்விக்குழு துணைத் தலைவர் முகைதீன் இபுராஹிம்,  பொருளாளர் பசீர் மரைக்கா மற்றும் இணைச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சேகு ஷபான் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!