17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..

எழுதியவர்: ஆசிரியர் November 2, 2023, 12:50 am

இராமநாதபுரம், நவ.1 – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது.  இதில்  கலந்து கொண்ட  200க்கும் மேற்பட்ட மாணவர்களில்  87 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இதில் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தமிழ் வழி ஜூனியர் பிரிவில் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தேவிபட்டினம்  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ஆங்கில வழி ஜூனியர் பிரிவில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளி, தேவிபட்டினம்  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி,  ஆங்கில வழி சீனியர் பிரிவில் நேஷனல் அகாடமி, ராமநாதபுரம்  நபிஷா அம்மாள் மெட்ரிக் பள்ளி ,  வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி  மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

இதில் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியை மு.இலக்கியா வழிகாட்டல் படி  ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்கள்  எம்.நிதிஷ்,  எஸ்.வசந்த் ஆகியோர் மக்கும் தன்மை கொண்ட இயற்கை உரம் நிறைந்த செடி நடும் உறை தயாரித்து அதன் திறனை சோதித்தல் என்னும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மண்டல போட்டிக்கு தகுதி படைத்த மாணவர்கள் நிதிஷ், வசந்த், வழிகாட்டி ஆசிரியை இலக்கியா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை யுனைசி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட செயலர் காந்தி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சதக் அப்துல்லா, பாலமுருகன், மாவட்ட நிர்வாகிகள் சசிகுமார், லியோன், ஜெரோம் சிற்பியன், கணேசன், வின்சென்ட் ஆகியோர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!