17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை-உசிலம்பட்டி அருகே மூன்று பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..

மதுரை-உசிலம்பட்டி அருகே மூன்று பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 2, 2023, 12:38 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடு மற்றும் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு இரவு வீட்டின் கொட்டத்தில் கட்டி வைத்த நிலையில் காலையில் எழுந்து தண்ணீர் வைப்பதற்கு சென்றபோது 3 பசு மாடுகள் மற்றும் ஒரு ஆடு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இதுகுறித்து பின்னியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பசு மாடுகள் குடிக்கும் தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!