18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூர் கொண்டைம்பட்டியில் ஏஐடியுசி 104 ஆம் ஆண்டு துவக்க விழா..

சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூர் கொண்டைம்பட்டியில் ஏஐடியுசி 104 ஆம் ஆண்டு துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2023, 12:37 am

சோழவந்தான் அக் 31. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஏ ஐ டி யு சி கட்டுமான சங்கத்தின் 104 ஆவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது .மாவட்ட செயலாளர் தாமஸ் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் கிளை செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு ராமர், கிளை பொருளாளர் சுரேஷ் ,மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக ஏ ஐ டி யு சி சங்கத்தின் 104ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர் திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெரு அருகில் மாவட்ட தலைவர் ஜோதிராமலிங்கம் ஏ ஐடியூ சி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார் விழாவிற்கு சங்கத்தின் பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னில வகித்தார் தலைவர் ரவி இனிப்பு வழங்கினார் செயலாளர் ராமர் நன்றி தெரிவித்தார் விழாவில் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் நலச் சங்கத்தினர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!