17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணியை துவங்கிய தன்னார்வ அமைப்பினர்..

உசிலம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணியை துவங்கிய தன்னார்வ அமைப்பினர்..

எழுதியவர்: ஆசிரியர் October 29, 2023, 1:32 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி கண்மாய்., சுமார் 40 க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் உசிலம்பட்டி நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த கண்மாயை தூர்வார கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து தூர்வாரி தூய்மையான கண்மாயாக மாற்றினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் முட்செடிகள் வளர்ந்து காணப்படும் இந்த கண்மாயை மீண்டும் தூர்வார முடிவு செய்த தன்னார்வ அமைப்பினர் கண்மாயின் கரையை பலப்படுத்துவது, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கரை பகுதியில் நடைபாதை அமைக்க முடிவு செய்து., இன்று 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை துவங்கியுள்ளனர்.

இந்த பணியை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், நகர் மன்ற தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.,

தொடர்ந்து கண்மாயை தூர்வாரவும், கண்மாய் கரையை பலப்படுத்தி, கரை பகுதியில் பேவர் நடைபாதை அமைக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!