17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்..டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு..

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்..டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு..

எழுதியவர்: ஆசிரியர் October 26, 2023, 11:18 pm

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா, நாளை துவங்கி, 30ம் தேதி நிறைவு பெறுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பாதுகாப்பு பணியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பை பலப்படுத்த டி.ஐ.ஜி.,க்கள் வேலுார் முத்துசாமி, திருச்சி பகலவன், கோவை சரவணசுந்தர், தஞ்சாவூர் ஜெயந்திரன் ஆகியோரும், எஸ்.பி.,க்கள் வேலுார் மணிவண்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன், செங்கல்பட்டு சாய் பிரணீத், காஞ்சிபுரம் சுதாகர், ஈரோடு ஜவஹர், சேலம் அருண் கபிலன் உட்பட, 25 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள், 73 பேரையும் நியமனம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால்  உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!