இராமநாதபுரம், அக்.26 – இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி அக் 30ல் பசும்பொன் வருகிறார். அவருக்கு வரவேற்பளித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாவட்ட செயலர் முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக அமைப்புச் செயலர் சுதா.கே.பரமசிவம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மகளிரணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி (பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவர்), எம்ஜிஆர் மன்ற இணை செயலர்கள் நிறைகுளத்தான் (முன்னாள் எம்பி), டாக்டர் எஸ்.முத்தையா (முன்னாள் எம்எல்ஏ), எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர்கள் சாமிநாதன் ( மாவட்ட அவைத்தலைவர்), சுந்தரபாண்டியன் (மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர்), மாவட்ட இணைச் செயலர் கவிதா சசிகுமார் (ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர்), மாவட்ட துணைச் செயலர்கள் பாதுஷா, பாலாமணி மாரி (போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்), மாவட்ட பொருளாளர் குமரவேல் உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி அக்.30 ல் பசும்பொன் வருகை: பரமக்குடியில் அதிமுக ஆலோசனை..
எழுதியவர்: ஆசிரியர் October 26, 2023, 8:58 am




You must be logged in to post a comment.