18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கான கூடைப்பந்து போட்டி

பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கான கூடைப்பந்து போட்டி

எழுதியவர்: ஆசிரியர் October 25, 2023, 1:59 am

இராமநாதபுரம், அக்.24- இராமநாதபுரம் கூடைப்பந்து சங்கம் சார்பில் கனகமணி அம்மாள் கோப்பைக்கான பள்ளி,  கல்லூரிகளுக்கு இடையிலான 16 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. டாக்டர் அரவிந்தராஜ் தலைமையேற்றார். 

மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் திருவெற்றியூர் SNMS மெட்ரிக். பள்ளி, ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதல் 2 இடம் பிடித்தன. பள்ளி, கல்லூரிக்கான மாணவிகளுக்கான போட்டியில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி, வேலுமனோகரன் கலை, அறிவியல் கல்லூரி முதல் 2 இடம் பிடித்தன.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் ராமநாதபுரம் கூடைப்பந்து சங்கம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, கீழக்கரை செய்யது ஹமீதியா கலை, அறிவியில் கல்லூரி முதல் 3 இடம் பிடித்தன. சிறப்பு விருந்தினர்களாக மோகன் ஸ்டோர் உரிமையாளர் மோகன், கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன், நடிகர் அரு.சுப்ரமணியன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி முஹமது அசாருதீன் அக்பர் நன்றி கூறினார். ராமநாதபுரம் கூடைப்பந்து சங்க தலைவர் அக்பர், துணைத்தலைவர் ராஜ்குமார், செயலர் ரவி குமார், இணை செயலர் லியோ ஸ்டீபன் ராஜ், பொருளாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!