18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு..

வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2023, 9:06 am

நவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் வருடம் வருடம் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதேபோன்று இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

புதுப்பாளையம் ஒன்றியம் சேர்ந்த கால்நடை ஆய்வாளராக பணிபுரிபவர் பாலாஜி இவர் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதில் முதல் நாள் ஆயுள் செல்வ விருத்தி ஏற்பட மகேஸ்வரி தேவி வழிபாடும், 2-ம் நாள் ஐஸ்வர்யம் கிடைக்க ராஜராஜேஸ்வரி வழிபாடும், 3-ம் நாள் தொழில் மேன்மை ஏற்பட வராஹி தேவி வழிபாடும் நடைபெற்றது. 4-ம் நாள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வளம்பெற மகாலட்சுமி தேவி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்களும் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!