இராமநாதபுரம், அக்.23- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ், நேரு யுவ கேந்திரா சார்பில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடந்தது. கல்லூரி டிரஸ்டி ஜெயந்தி ராஜா முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வா் செளமியா தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனைவரும் 75-வது அமுத பெருவிழா உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாணவியர் பேரணி நடந்தது. ரங்கோலி உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ராஜா பரிசு வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் சுப்ரமணியன், கல்லூரி ஆலோசகர் மலர்விழி, வேதியல் துறைத்தலைவர் கவி பாலன், தமிழ் துறை உதவி பேராசிரியை கவிதா என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஒருங்கிணைத்தனர். உதவிப் பேராசிரியை கலைவாணி நன்றி கூறினார்.
கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்..
எழுதியவர்: ஆசிரியர் October 23, 2023, 9:14 am




You must be logged in to post a comment.