17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் எம்பி நிதியில் 872 மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை…

ராமநாதபுரம் எம்பி நிதியில் 872 மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை…

எழுதியவர்: ஆசிரியர் October 22, 2023, 12:00 pm

இராமநாதபுரம், அக்.21- இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சொந்த நிதியில் மாணாக்கர் 872 பேருக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடந்த  நிகழ்வில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட (பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி) 872 மாணவர்களுக்கு ரூ.1.74 கோடி உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம் எல்ஏ, மாவட்ட திமுக பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ, கருமாணிக்கம் எம்எல்ஏ ( காங்.,), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மாணாக்கருக்கு உதவித்தொகை வழங்கினர். கல்வித்தொகை பெற்றுக்கொண்ட மாணாக்கருக்கு  நவாஸ் கனி எம்பி  ஆலோசனை வழங்கி னார். நவாஸ் கனி எம்பி கடந்த 5 ஆண்டுகளாக தனது சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குகிறார். 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!