17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் வட்டார சுகாதார பேரவை கூட்டம்..

மண்டபம் வட்டார சுகாதார பேரவை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் October 20, 2023, 9:57 am

இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப் புளியில் உள்ள மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டபம் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது

ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். பருவ மழை தொடங்கி உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி உறுதியளித்தனர். மண்டபம்  வட்டாரக் கல்வி அலுவலர் சூசை,  எய்டு இந்தியா திட்ட மேலாளர் சுகப்ரியா, கீழநாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன்,  வெள்ளரி ஓடை ஊராட்சி தலைவர் சந்திரசேகர்,  தேர்போகி ஊராட்சி தலைவர் மோகன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!