இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள பத்திப்பதிவு அலுவலகத்தில் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு நெ 1 சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக சார் பதிவாளர் முத்து பெத்தாச்சியிடம் விசாரித்து வருகின்றனர். இரவில் நடத்திய சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் இரவில் பறிமுதல்..
எழுதியவர்: ஆசிரியர் October 20, 2023, 9:42 am




You must be logged in to post a comment.